மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிக்கன் பீஸுக்கு நடந்த சண்டை; கலவரமாக கல்யாண வீடு.. மாப்பிள்ளை Vs பெண் தரப்பு மோதல்.!
கொண்டாட்டங்கள் நிறைந்த திருமணங்கள் எப்போதும் நினைவில் இருப்பவை. ஆனால், இன்றளவில் அற்பத்தனமான விஷயங்களுக்காக இருமனம் இணையும் திருமணம் சண்டைகளுடன் நடப்பதும் நடக்கிறது. இவ்வாறான துயரங்கள் தவிர்க்கப்படவேண்டியவை ஆகும்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அந்த திருமணத்தில் கலந்துகொண்ட நபர்களுக்கு, இரவு விருந்தாக பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது. அச்சமயம், பிரியாணியில் சிக்கன் லெக்பீஸ் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் அம்பலமானதால் பயங்கரம்; பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர் கூட்டம்.!
சிக்கனுக்காக நடந்த சண்டை
இதனைகவனித்த மணமகன் தரப்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சிக்கன் பீஸ் கேட்டுள்ளனர். இதனால் எழுந்துள்ள வாக்குவாதம், இறுதியில் கைகலப்பில் முடிந்து இருதரப்பும் தாக்கிக்கொண்டது. சேர், கையில் கிடைத்த பொருட்கள் என கல்யாண வீடு கலவரப்பட்டு இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என அதிகாரிகள் கூறுவதால், இருதரப்பும் மோதலை பேசி தீர்த்துக்கொண்டு இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
A fight broke out in a wedding for a leg piece in Bareilly, Uttar Pradesh#Video #Funny #Comedy #Shorts #Viral pic.twitter.com/gcIwTHexIR
— Funny Comedy Tube (@FunnyComedyTube) June 26, 2024
இதையும் படிங்க: பெண் காவலருக்கே நடுரோட்டில் இப்படியா?.. கான்ஸ்டபிளால் நடந்த பரபரப்பு சம்பவம்..! வேடிக்கை பார்த்த மக்கள்.!