தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
திருமணமான 5 நாளில், புதுமணப்பெண்ணின் உயிரை காவு வாங்கிய எமன்; வாட்டர் ஹீட்டர் வெடித்து பலி.!
வீட்டின் குளியல் அறையில் புதுமணப்பெண் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம், பரேலி, மிர்கன்ச் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ்பால். இவரின் மகள் தாமினி. போஜிபுரா கிராமத்தில் வசித்து வருபவர் தீபக். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, கடந்த நவ.22 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்தைத்தொடர்ந்து தம்பதிகள் இருவரும் தீபக்கின் வீட்டில் வசித்து வருகிறார்கள். இதனிடையே, இன்று காலை நேரத்தில் குளிக்கச் சென்ற தாமினி, நீண்ட நேரம் ஆகியும் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கேட்.. பள்ளிக்குள் நுழைந்த 13 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய சோகம்..! கண்ணீரில் பெற்றோர்.!
குளியல் அறையில் பரிதாப பலி
பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாமினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குளியல் அறையில் இருந்த தண்ணீர் சூடாக்கும் இயந்திரம் வெடித்து, அதனால் தாமினி இறந்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டர் வெடித்தால் சத்தம் கேட்கவில்லையா? குடும்பத்தினர் அப்போது எங்கே இருந்தார்கள்? எனவும் விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி., சுவிங்கம்தானே என அலட்சியமா? பெற்றோர்களே கவனம்.!