பேராசிரியரின் பொறுக்கித்தனம்.. 20 மாணவிகள், 59 வீடியோக்கள்.. அதிர்ச்சியை தந்த பகீர் தகவல்.!

அதிக மதிப்பெண் வழங்குகிறேன், பரீட்சையில் பெயில் ஆகிவிடுவேன் என அதிகாரத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் ஆசிரியர் அத்துமீறிய கொடுமை 20 ஆண்டுகளாக உபியில் நடந்தது வீடியோ வெளியாகி அம்பலமாகி இருக்கிறது.
20 ஆண்டுகளாக அத்துமீறல்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம், பிசி பாக்லா கல்லூரியில், பேராசிரியராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் ரஜ்னீஷ் குமார். சமீபத்தில் இவர் கல்லூரி அலுவலகம் மற்றும் வகுப்பறையில், தனியாக இருக்கும் மாணவிகளிடம் அத்துமீறுவது தொடர்பான 59 க்கும் அதிகமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
கல்லூரி வளாகத்திலேயே கொடுமை
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வரும் ரஜ்னீஷ், மாணவிகளிடம் அதிக மதிப்பெண் உட்பட ஆசை காண்பித்து பாலியல் அத்துமீறல் போன்ற சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. தனது அறையின் அலுவலகத்தில் மாணவியை வரவழைத்து அமரவைக்கும் பேராசியர், அத்துமீறல் செயலிலும் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கரும்பு தோட்டத்தில் அதிர்ச்சி.!
புகார் அளிக்க கோரிக்கை
இதுதொடரான வீடியோ வெளியாகி வைரலாகியதைத்தொடர்ந்து, விஷயம் காவல்துறையினர் மற்றும் மகளிர் ஆணையம் வரையில் சென்றுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் பேராசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் பொண்டாட்டி, மாமியார் கொடுமை தாங்கல.. இளைஞரின் மரண வாக்குமூல வீடியோ லீக்.. அதிரவைக்கும் சம்பவம்.!