என் பொண்டாட்டி, மாமியார் கொடுமை தாங்கல.. இளைஞரின் மரண வாக்குமூல வீடியோ லீக்.. அதிரவைக்கும் சம்பவம்.!



in Uttar Pradesh Musaffarnagar Man Attempt Suicide 

மனைவி, மாமியார் குடும்பத்தினர் மீது குற்றசாட்டு வைத்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர், சிட்டி கோட்வாலி பகுதியில் வசித்த வருபவர் ராகுல் இவரின் மனைவி ஜோதி. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஓராண்டு மட்டுமே ஆகிறது. இதனிடையே, ராகுலின் மனைவி ஜோதி மற்றும் அவரின் குடும்பத்தினர், ராகுலை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ரூ.12 இலட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் பெண் வீட்டார், பணத்தை கொடுக்காத பட்சத்தில் பொய்யான புகார்களை அளித்து வழக்கில் சிக்கவைப்போம் என மிரட்டி இருக்கின்றனர். மேலும், மாமியார், அவரின் உறவினர்கள் என பலரும் வந்து ராகுலை தாக்கி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: இளைஞர்களின் கொண்டாட்டத்தால் சோகம்; 55 வயது நபர் மாரடைப்பால் பலி.!

Uttar pradesh

தற்கொலை முயற்சி

இதனால் ஒருகட்டத்தில் மனவேதனை அடைந்த நபர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது மரண வாக்குமூலத்தையும் வீடியோ பதிவு செய்தவர், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனையடுத்து, ராகுலை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஆணுறுப்பு நறுக்... கணவன், சகோதரர்கள் பகீர் செயல்.!