17 வயது சிறுமி பலாத்காரம், வீடியோ எடுத்து மிரட்டல்; 2 கயவர்கள் அதிர்ச்சி செயல்..!



  in Uttar Pradesh Kanpur Girl Raped by 2 Man Gang and Filmed Obscene Video 

தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்ல இயலாமல் தவித்த சிறுமி, தற்கொலைக்கு முயன்ற பின்னர் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியைச்சேர்ந்த 17 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்துள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சிறுமியை அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். 

இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து, பலாத்காரம் தொடர்பாக வெளியே கூறினால் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகும் எனவும் மிரட்டி இருக்கின்றனர். இதனால் மனமுடைந்து போன சிறுமி, தனக்கு நேர்ந்ததை வெளியே கூற முடியாமல் தவித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: "என்னை பார்த்து சிரிச்சா, கொன்னு கற்பழிச்சிட்டேன்" - சைக்கோ சீரியல் கில்லர் திடுக் வாக்குமூலம்.! 

 

Rape

ஒருகட்டத்தில் மன உளைச்சலில் கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, காவல் துறையினரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்,சிறுமியை பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவி 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நண்பனை நம்பிச் சென்றபோது நடந்த பயங்கரம்.!