மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதல்.. "கழுத்தில் ஒரே பன்ச்".. தொழிலதிபர் மனைவி எரித்துக்கொலை.!
கள்ளக்காதல் ஜோடியிடையே எழுந்த வாக்குவாதத்தில், தொழிலதிபரின் மனைவி ஜிம் பயிற்சியாளரால் ஒரே பஞ்சில் நாக்கவுட் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகேயுள்ள பகுதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் தொடர்பான விவகாரம் அம்பலமாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜிம் பயிற்சியாளர் விமல் சோனி குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபரின் மனைவியான ஏக்தாவை அவர் கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: அந்த விசயத்திற்கு கணவர் எதிர்ப்பு.. உணவில் வேளை காட்டிய மனைவி.. அம்பலப்படுத்திய மகள்.! உறக்கத்திலேயே பிரிந்த உயிர்.!
குற்றவாளி கைது
ஏக்தா மாயமானது குறித்து காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பெண் மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக ஜிம் பயிற்சியாளர் விமல் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது அம்பலமானது.
வாக்குவாதம் கொலையில் முடிந்தது
கான்பூரில் உள்ள ராஜபுரவா பகுதியில் வசித்து வந்த சோனிக்கும், தொழிலதிபரின் மனைவியான ஏக்தாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் பல நேரங்களில் தனிமையில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது.
எரித்துக்கொலை
இருவரும் காரில் பேசிக்கொண்டு இருக்கும்போது, வாக்குவாதம் முற்றியதில் சோனி ஏக்தாவின் கழுத்தில் சோனி குத்தியுள்ளார். இதனால் ஏக்தா மயங்கவே, அவர் இறந்துவிட்டதாக எண்ணி உடலை எடுத்துச் சென்று எரித்து தடயத்தை அழித்து இருக்கிறார். மனைவி மாயமானது குறித்து ஏக்தாவின் கணவர் ராகுல் குப்தா கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
4 மாதங்களுக்கு பின்
புகாரின் பேரில் அதிகாரிகள் தனிப்படை அமைத்து புனே, ஆக்ரா, பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு சென்றும் தடையங்களை தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியில் கான்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகேயே அனைத்தும் முடிந்துள்ளது விசாரணையில் அம்பலமானது. 4 மாதங்களுக்கு பின்னர் குற்றவாளி கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கொலை; நண்பருடன் சேர்ந்து இளைஞர் பயங்கரம்.!