மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விசயத்திற்கு கணவர் எதிர்ப்பு.. உணவில் வேளை காட்டிய மனைவி.. அம்பலப்படுத்திய மகள்.! உறக்கத்திலேயே பிரிந்த உயிர்.!
கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்த கணவரை, மனைவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் பத்மநாபன். இவரின் மனைவி உமா. தம்பதிகளின் மகள் சஞ்சனா, பெங்களூரில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த அக்.09 அன்று சந்தோஷ் மாரடைப்பால் காலமானதாக உமா தரப்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கொலை; நண்பருடன் சேர்ந்து இளைஞர் பயங்கரம்.!
இந்த தகவலை அறிந்த பலரும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்த நிலையில், மகள் சஞ்சனா தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அன்றைய தினத்தில் சிசிடிவி கேமிரா காட்சிகள் அகற்றப்பட்டு இருந்ததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவில் கிடைத்த துப்பு
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்த பிற சிசிடிவி கேமிராவை கண்காணிக்கும்போது, சம்பவத்தன்று உமா வேறொரு நபரின் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கியது தெரியவந்தது.
பின் உமாவிடம் விசாரணை நடத்தியபோது கொலைக்கான காரணம் அம்பலமானது. அதாவது, உமாவுக்கும் - சோவித் கவுடா என்ற நபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால், இருவரும் தனிமையில் பல நேரங்களில் சந்தித்து வந்துள்ளனர். இவ்விவகாரம் சந்தோஷுக்கு தெரியவந்து, அவர் மனைவியை கண்டித்து இருக்கிறார்.
இடையூறாக இருந்த கணவனை போட்டுத்தள்ளிய பயங்கரம்
கள்ளக்காதல் விசயத்திற்கு கணவர் இடையூறாக இருப்பதாக எண்ணிய உமா, சந்தோஷை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, கடந்த 09 ம் தேதியன்று உணவில் உறக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். கணவர் உறங்கியதும் சோவித், அவரின் கூட்டாளி பவன் ஆகியோரை வீட்டிற்கு வரவழைத்து கணவரின் முகத்தில் தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளார்.
இந்த உண்மை சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உமா, சோவித், பவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கொத்தாக தூக்கி இலண்டனுக்கு அனுப்பி வைத்த காவல்துறை..!