விமான நிலைய பார்சலில் அதிர்ச்சி; குழந்தையின் சடலம் மீட்பு.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.. பதறவைக்கும் காணொளி.!



in Uttar Pradesh Lucknow Airport Died Infant Baby Rescued 

 

மும்பைக்கு அனுப்ப வேண்டிய பார்சலில், குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையத்திற்கு பார்சல் ஒன்று வந்தது. இந்த பார்சல் லக்னோவில் இருந்து மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: சாகுற வயசா இது? 8 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!

இதனிடையே, பார்சலை சோதனை செய்தபோது, அது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் பார்சலை பிரித்து சோதனை செய்தனர்.

Uttar pradesh

குழந்தையின் உடல் மீட்பு

அப்போது, பிளாஸ்டிக் டப்பாவுக்குள், தண்ணீர் ஊற்றப்பட்டு, பிறந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலைக் கைப்பற்றினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக பார்சலை விநியோகம் செய்ய கொரியர் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது. 

இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாரடைப்பால் நண்பர்கள் கண்முன் பரிதாப மரணம்..!