மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ காதலன்; நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவத்தின் காரணம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம், சர்தானா பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார். கடந்த ஜூலை 21 ம் தேதி முதல் சிறுமி காணவில்லை. இதனால் பதறிப்போன அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமி சடலமாக மீட்பு
புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் சடலம் அங்குள்ள கணேஷ்பூர் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. சிறுமியின் முகமும் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது. இதனால் சிறுமியை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் குற்றசாட்டை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: டீ கொடுக்காதது ஒரு குற்றமா? மருமகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்; பதைபதைக்க வைக்கும் கொடூரம்.!
காதலனின் அதிர்ச்சி செயல் அம்பலம்
இதனிடையே, சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை காதலித்து வந்த இளைஞர் ஹுசைன், சிறுமியிடம் காதலின் பெயரைச்சொல்லி ரூ.2.5 இலட்சம் வரை பறித்து இருக்கிறார். வேலையில்லாமல் சுற்றிவந்த ஹுசைனுக்கு ஒருகட்டத்தில் சிறுமி பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
பலாத்காரம் செய்து கொடுமை
இதனால் சம்பவத்தன்று தனது காதலியான சிறுமியை இறுதியாக பார்க்க வேண்டும் என உணவகம் ஒன்றுக்கு அழைத்துசென்றவர், அங்கிருந்து வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியின் தலையை துண்டித்து கொன்று, முகத்தில் ஆசிட் ஊற்றிவிட்டு வந்துள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில், இளைஞரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் பயங்கரம்; இளைஞர் கழுத்தறுத்து படுகொலை.!