கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
டீ கொடுக்காதது ஒரு குற்றமா? மருமகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்; பதைபதைக்க வைக்கும் கொடூரம்.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், அட்டாபூர், ஹாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பர்ஸானா. இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். பர்ஸானாவின் மகனுக்கு திருமணம் நடந்து முடிந்து, மனைவி அஜ்மீரா பேகம் (28) என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.
புதுமண தம்பதிகளுடன் பர்ஸானாவும் இருக்கிறார். இதனிடையே, மாமியார் - மருமகள் இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் பயங்கரம்; இளைஞர் கழுத்தறுத்து படுகொலை.!
வாக்குவாதத்தில் அதிர்ச்சி செயல்
இந்நிலையில், நேற்று காலை மாமியார் பர்ஸானா தனது மருமகள் பேகத்திடம் குடிக்க தேநீர் வைத்துக்கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மருமகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாமியார் பர்ஸானா, மருமகள் பேகத்தை துப்பட்டா கொண்டு கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின் கொலை செய்ததை உணர்ந்த அவர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மாமியார் கைது
தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பர்சானாவை கைது செய்தவர்கள், சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் வீசப்பட்ட பெண்.! முதியவரின் வெறிச்செயல்.! திடுக் சம்பவம்!!