காதலியை கால் கேர்ள் ஆக்கி வருமானம் பார்த்த இளைஞர்; டேட்டிங் ஆப்-பில் கஸ்டமர்ஸ்.. பகீர் தகவல்.!



  in Uttar Pradesh Noida High tech Dating Prostitution gang Arrested by Cops 

டேட்டிங் செயலி மூலமாக ஹைடெக் விபச்சாரம் செய்து வந்த இளைஞர், அவரின் காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன்னதாக விபச்சார வழக்கில் 3 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், லல்லு பிரசாத் என்ற இளைஞரும், அவரின் காதலி அஞ்சலியும் சேர்த்து ஹைடெக் விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. 

இவர்கள் இருவரும் சேர்ந்து 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசி பழக்கத்தை ஏற்படுத்துவார்கள். பின் விரைந்து பணம் சம்பாதிக்கலாம் என ஆசைகாண்பித்து, விபச்சார தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: லோன் கொடுப்பதாக 900 கோழிகளை தின்று ஏப்பம் விட்ட எஸ்பிஐ வங்கி மேலாளர்; உரிமையாளர் கதறல்.!

விபச்சார பணத்தில் உல்லாச வாழ்க்கை

பிரசாத் தனது காதலியை வைத்தும் விபச்சாரம் செய்து வந்துள்ளார். டேட்டிங் செயலி மூலமாக ஆண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தும் அஞ்சலி, அவர்களின் வாயிலாக விபச்சார தொழிலினை மேற்கொண்டு வந்துள்ளார். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து இருவரும் உல்லாச வாழ்க்கையும் வாழ்ந்துள்ளனர். 

சில இளைஞர்களை ஏமாற்றவும் செய்துள்ளனர். அவ்வாறாக இவர்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லாலு பிரசாத், அவரின் காதலி அஞ்சலி, இவர்களுக்கு உதவியவர்கள் என 3 இளைஞர்கள், 2 இளம்பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு மோசடி; ரூ.52 இலட்சத்தை பறித்த இளைஞர் கைது.. ஆசை வார்த்தை கூறி பகீர்.!