பங்குச்சந்தை முதலீடு மோசடி; ரூ.52 இலட்சத்தை பறித்த இளைஞர் கைது.. ஆசை வார்த்தை கூறி பகீர்.!



  a Kerala Youth Arrested by Cops After Scam Name of Stock Investment 

பங்குசந்தையில் முதலீடு செய்யவைத்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரளா மாநிலத்தில் வசித்து வருபவர் அஜ்மல். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரிடம், பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக இலாபம் பார்க்கலாம் என கூறி இருக்கிறார். 

FHD செயலி

அவரின் வார்த்தையில் விழுந்த நபர், முதலில் கொடுத்த தொகைக்கு வருமானமாக ரூ.4 இலட்சம் கொடுத்துள்ளார். பின் ஆன்லைனில் FHD என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அஜ்மல் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: இளம்பெண்ணின் ஆடையை கழற்றச்சொல்லி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. மக்களே உஷார்.!

கம்பி நீட்டியவாறு கைது

இதனை நம்பி மொத்தமாக ரூ.52 இலட்சம் முதலீடு செய்த நிலையில், அஜ்மல் கம்பி நீட்டினார். இதனால் அதிர்ந்துபோனவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஜ்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாய் பெஸ்டி பேச்சைக் கேட்டு மனைவி விபரீதம்: கண்களில் மிளகுபொடித்தூவி, கல்லால் அடித்தே கணவன் கொலை..!