#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பள்ளி ஆசிரியரை குடும்பத்துடன் சூறையாடிய கொடூர கும்பல்; நால்வர் கொடூர கொலை.. காரணம் என்ன?..!
வீடுபுகுந்து பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட சம்மபவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டத்தில், பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் சுனில் குமார். இவரின் மனைவி பூனம். தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: "யாரு கூட படுத்தாச்சும், எனக்கு குழந்தை பெத்து கொடு.." சைக்கோ கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களின் அன்புக்கு அடையாளமாக 5 வயது 2 வயதுடைய இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதனிடையே, சம்பவத்தன்று இவர்களின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்தனர்.
துப்பாக்கிசூட்டில் நால்வர் பலி
வீட்டிற்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிசூடு நடத்திய கும்பல் சுனில் குமார், அவரின் மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள் எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: குடிகார கணவனை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி; குழந்தைகள் கண்முன் பறிபோன தந்தையின் உயிர்.!