மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார கணவனை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி; குழந்தைகள் கண்முன் பறிபோன தந்தையின் உயிர்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்தோய் மாவட்டம், போலாபூர்வா பகுதியில் வசித்து வருபவர் சர்வேஷ் (வயது 45). இவரின் மனைவி ரீமா தேவி. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்.
மதுபோதை பழக்கத்திற்கு அடிமையான சர்வேஷ், எப்போதும் வேலைக்கு சென்றுவிட்டு போதையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம் என கூறப்படுகிறது. மேலும், குடும்ப செலவுக்கும் பணம் வழங்காமல் இருந்த வந்துள்ளார்.
போதை கணவனுடன் வாக்குவாதம்
கணவரின் மதுபோதை பழக்கத்தை அவ்வப்போது மனைவி கண்டித்த நிலையில், சம்பவத்தன்று போதையில் இருந்த சர்வேஷ் - மனைவி ரீமா இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இரவில் குழந்தைகள் உறங்கியபின் நடந்த சண்டையில், அவர்கள் எழுந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 11 வயது சிறுவன் கடத்திக்கொலை; ரூ.15 இலட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் அதிர்ச்சி செயல்.!
செங்கல்லால் அடித்துக்கொலை
ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ரீமா தேவி, தனது கணவரின் தலையில் செங்கலை வீசி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சர்வேஷ் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ரீமா தேவி தந்தையின் தலையில் செங்கலை வீசியதால் அவர் உயிரிழந்ததாக குழந்தைகள் கூறி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கை-கால்களை துண்டாக்கி, 17 வயது மகளை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தந்தை; அதிரவைக்கும் காரணம்.!