மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுக்கெல்லாமா தற்கொலை?.. தேங்காய் தண்ணீர் கொடுக்காததால், 15 வயது சிறுவன் தற்கொலை..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுடி கதவால், கோட்வார் பகுதியில் வைத்து வரும் 15 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவனின் தந்தை சமோலியில் உள்ள காவல் நிலையத்தில், காவலராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த 15 வயது சிறுவன், பெற்றோரிடம் குடிக்க தேங்காய் தண்ணீர் கேட்டுள்ளார். மாலை நேரத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் சளிபிடித்து காய்ச்சல் வரும் என கூறி இருக்கின்றனர்.
தூக்கிட்டு தற்கொலை
இதனால் மாணவர் மனம் வருந்தி இருக்கிறார். பின் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க: "வாழ்க்கைல கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்க" மனைவி தொல்லையால் கண்கலங்கி கணவர் தற்கொலை.!
மகன் இரவு நேரத்தில் சாப்பிட இன்னும் வரவில்லையே என பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது விபரீதம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்பி எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி தம்பதி தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர் தகவல்.!