மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பளம் போல நொறுங்கிய கார்; ஆற்றில் உருண்டு விழுந்து 8 பேர் பரிதாப பலி.!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி உட்பட பல்வேறு புனித தலங்களுக்கு பக்தர்கள் கடந்த சில வாரங்களாக சார்தாம் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறாக பயணம் செய்யும் பக்தர்கள் தங்களின் சொந்த வாகனத்திலும், வாடகை வாகனத்திலும் பயணிக்கின்றனர்.
இவர்கள் பயணம் செய்யும் இடங்கள் அனைத்தும் மலைப்பகுதி என்பதால், மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கவும் ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இதனிடையே, அவ்வப்போது சில வாகனங்கள் விபத்தில் சிக்கி பக்தர்கள் பலியாகுவது தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: அலட்சியத்தால் நொடியில் நடந்த பதைபதைப்பு விபத்து; பதறவைக்கும் வீடியோ.!
ஆற்றில் உருண்டு விழுந்து விபத்து
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உலா பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பக்தர்கள் வாகனம் ஒன்று, அலகண்டா நதியில் உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது. ருத்ரப்ரயாக் நகருக்கு மிக அருகில் விபத்து நடந்த நிலையில், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு பலியான 8 பேரின் சடலத்தை மீட்டனர். மொத்தமாக 25 பேர் வரை டெம்போ ட்ராவலர் வாகனத்தில் பயணம் செய்த நிலையில், அவர்களிலி 8 பேர் பலியாகியுள்ளனர். எஞ்சியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணம் செய்த வாகனம், மலைப்பாங்கான பள்ளத்தாக்கில் கற்குவியல் போல இருந்த ஆற்றுப்படுகையில் உருண்டு விழுந்து உருக்குலைந்து கிடந்தது.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்: கணவன் கண்முன் மனைவி பரிதாப பலி.!