விழுப்புரம்: கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை.. போதை இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.!



in Viluppuram Mailam College Girl Sexual Harassment

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் வசித்து வரும் மாணவி, புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு நர்சிங் துறையில் பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்ல, ஊரில் உள்ள பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.

கிராம மக்கள் பிடித்தனர்

அப்போது, அரசுப்பள்ளி பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டுபேர், மாணவியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதன் அதிர்ச்சியடைந்த மாணவி அலறவே, சத்தம் கேட்டு வந்தவர்கள் இளைஞர்களை மடக்கிப்பிடித்தனர்.

இதையும் படிங்க: பேராசிரியரின் பொறுக்கித்தனம்.. 20 மாணவிகள், 59 வீடியோக்கள்.. அதிர்ச்சியை தந்த பகீர் தகவல்.!

Viluppuram

குற்றவாளிகள் இருவர் கைது

தகவல் அறிந்து வந்த மயிலம் காவல்துறையினர், இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, இருவரும் கண்ணியம் கிராமம், ரெட்டியார் தெருவில் வசித்து வரும் முனுசாமி மகன் ஓட்டுநர் விக்கி ஞானமூர்த்தி (22), திருவள்ளுர் மாவட்டம் நரசதுப்பேட்டை ஜெகநாதன் மகன் எலக்ட்ரீசியன் யுவராஜ் (23) என்பது உறுதியானது.

இருவரும் போதையில் காலை நேரத்தில் மாணவியை துன்புறுத்தியது தெரியவந்ததைத்தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; சீருடையில் சாலை மறியல்.!