மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்தில் நடந்த சோகம்; துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், செல்லக்கெரே பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜியானா ஜிட்டோ என்ற 8 வயது சிறுமி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த ஜனவரி 22 ம் தேதி சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, 3 வது தளத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி ஜியானாவின் பெற்றோர் ஜிட்டோ டோமி ஜோசப் மற்றும் பினிட்டா தாமஸ் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவார்கள்.