மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி; தண்ணீர் சுத்திகரிப்பானில் பழுது நீக்க வந்த பணியாளர் அதிர்ச்சி செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பெகுர் பகுதியில், 30 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவர் சாப்டவெர் என்ஜினியராக வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று இவரின் வீட்டில் இருக்கும் நீர் சுத்திகரிப்பான் செய்யவில்லை. இதனால் அதனை சரி செய்யும் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தனியாக இருந்த பெண்
கடந்த மே 04ம் தேதி பெண்ணுக்கு தொடர்பு கொண்ட ஊழியர், பெண்ணின் வீட்டிற்கு நீர் சுத்திகரிப்பானை சரி செய்ய வருகை தருவதாக கூறியுள்ளார். இரவு 5 மணியளவில் பெண்ணும் அவரை வீட்டில் அனுமதி செய்த நிலையில், பழுதை சரி செய்துகொண்டு இருந்த நபர் பெண் தனியே இருப்பதை புரிந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: "உன் சாதிய என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க" குட் பை சொன்ன காதலன்.! உயிரை மாய்த்த பெண்.!
நிலைமையை சாதகமாக்க முயற்சி
இதனையடுத்து, சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிய நபர், பெண் சமையலறையில் இருக்கும்போது அவரிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். இதனால் பதறிப்போன பெண்மணி இளைஞரை வெளியே தள்ளிவிட்டு சமையலறையின் கதவை தாழிட்டு இருக்கிறார். நல்வாய்ப்பாக பெண்ணின் செல்போன் சமையல் அறைக்குள் இருந்துள்ளது.
தோழிக்கு தொடர்புகொண்ட இளம்பெண்:
சமையலறை கதவின் வெளியே இளைஞர் பெண்ணுக்காக காத்திருந்துள்ளார். நிலைமையை உணர்ந்த பெண்மணி தனது தோழிக்கு செல்போனில் தகவல் கொடுக்க, அவர் உடனடியாக அங்கு வந்துள்ளார். பின் இருவருமாக சேர்ந்து இளைஞரை எதிர்கொள்ள, அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தப்பிச்சென்ற கயவன்
உடனடியாக இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சர்ச்சைக்குரிய நபரை தேடி வந்தனர். இளைஞர் பயத்தில் இரவு முழுவதும் அவரின் வீட்டிற்கு செல்லாமல் வெளியே சுற்றி இருக்கிறார். இந்த விபரத்தை அறியாத பெற்றோர், தங்களின் மகன் மாயமானதாக புகார் பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
கைது செய்த காவல்துறை
அதனை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர், பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயற்சித்ததை கூறி இருக்கின்றனர். பின் ஒருநாள் தேடலுக்கு பின்னர் இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 6 வயது மகனை முதலைகளுக்கு பலிகொடுத்த தாய்; தகப்பனின் அவச்சொல்லால் விபரீதம்.!