திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"உன் சாதிய என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க" குட் பை சொன்ன காதலன்.! உயிரை மாய்த்த பெண்.!
இளம் பெண் ஒருவரை காதலித்து விட்டு அவரின் ஜாதியை காரணம் காட்டி காதலன் கழட்டி விட்டதால் அந்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உயிருக்கு உயிரான காதல்
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கலபுர்கி பகுதியில் காந்தி நகரில் வசித்து வரும் கிரண் என்ற நபர் புஷ்பா எனும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். புஷ்பா யூ பி எஸ் சி தேர்வுக்காக படித்துக் கொண்டு இருந்துள்ளார். கிரணும் புஷ்பாவும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: 3 சவரன் நகைக்காக பெண் வெட்டிக்கொலை?; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!
சாதிய விவகாரம்
இவர்களது காதல் விவகாரம் கிரண் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் புஷ்பா வேறு ஜாதி என்பதால் அந்த இளைஞரின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், கிரண் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்ய மறுப்பு
சமீப காலமாக கிரணின் நடவடிக்கைகளில் புஷ்பாவுக்கு அவநம்பிக்கை ஏற்பட தன் காதலன் தன்னை விட்டு பிரிந்து விடுவான் என்ற பயத்தில் புஷ்பா தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி திறனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிரண் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பெண் தற்கொலை :
புஷ்பாவின் ஜாதியை காரணம் காட்டி இருக்கிறார். இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த புஷ்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதியை காட்டி காதலன் திருமணம் செய்ய மறுத்த காரணத்தால் இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்கில் பேண்டை அவிழ்த்த பெண்மணி; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!