வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
எஞ்சின் ஆயில் தான் 25 ஆண்டுகளாக எனது உணவு; பீதியை கிளப்பிய பக்தர்.. இப்படியும் ஒரு மனிதரா?.!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், கிருஷ்ணகிரி பகுதிக்கு வந்துள்ளார். பார்க்க ஐயப்ப சாமி பக்தர் போல இருந்தவர், திடீரென கேனில் இருந்த கருப்பு நிறத்திலான திரவத்தை குடித்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதனை என்ன என சோதனை செய்தபோது, கேனில் பழைய எஞ்சின் ஆயில் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: "யாரு கூட படுத்தாச்சும், எனக்கு குழந்தை பெத்து கொடு.." சைக்கோ கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
இதனால் சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது, தான் கடந்த 25 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்தே உயிர் வாழ்வதாகவும், இதனால் தனக்கு உடல் நலத்தில் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை எனவும் கூறி இருக்கிறார்.
#JUSTIN எஞ்சின் ஆயிலை தண்ணீர் போல் குடிக்கும் நபர் 😱
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 30, 2024
25 வருடமாக உணவாக பழைய எஞ்சின் ஆயிலை குடிக்கும் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர்#Krishnagiri #EngineOil #Oil #Food #News18tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/q5eETvMOia
இந்த தகவலை கேட்டு அதிர்ந்துபோனவர்கள், அவரை வீடியோ எடுத்தவாறு விபரத்தை கேட்டறிந்துள்ளனர். இறுதியில் உண்மையை அறிந்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உணவு சாப்பிடாமல் மனிதரால் சில நாட்கள் வரை தண்ணீர் குடித்தே உயிர்வாழ இயலும் எனினும், உடலில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தீர்ந்தால் மரணம் தான்.
நிலைமை இப்படியிருக்க, கடந்த 25 ஆண்டுகளாக அவர் எஞ்சின் ஆயிலை, அதுவும் பழைய ஆயிலை குடித்து எப்படித்தான் உயிர் வாழ்கிறார் என தெரியவில்லை.
வீடியோ நன்றிநியூஸ் 18 தொலைக்காட்சி
இதையும் படிங்க: தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க போலி ரைடு; அரசுப்பணியாளர்களின் திருட்டு சேட்டை அம்பலம்.. நால்வர் கைது.!