தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க போலி ரைடு; அரசுப்பணியாளர்களின் திருட்டு சேட்டை அம்பலம்.. நால்வர் கைது.!



Karnataka Bangalore GST officers Fake Raid 4 Arrested

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மண்டல ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலைபார்த்து வருபவர்கள் அபிஷேக், மனோஜ் சைனி, நாகேஷ் பாபு, சோனாலி ஷாஹி. 

இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து, தொழிலதிபர் ஒருவரின் வீடு & அலுவலகங்களில் போலியான சோதனையை நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனையின் முடிவில் ரூ.1.5 கோடி பணமும் ஏமாற்றி வசூலிக்கப்பட்டுள்ளது. 

நான்கு பேர் கைது

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர், ஜிஎஸ்டி அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர். 

இதையும் படிங்க: ஓவிய ஆசிரியரின் செல்போனில் 5000+ நிர்வாண விடியோக்கள்; விசாரணையில் பரபரப்பு தகவல்.! 

அரசுத்துறை அதிகாரிகள் தவறுகள் செய்வோரை தட்டிக்கேட்காமல், அதனை பின்னாளில் குழுவாக இணைந்து தங்களின் மறைமுக சம்பாத்யத்திற்கு பயன்படுத்தி வருவது சமீபகாலமாக அம்பலமாகி அதிர்ச்சியை தருகிறது.

இதையும் படிங்க: புக்கிங்கை கேன்சல் செய்ததால் ஆத்திரம்; பெண்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. பட்டப்பகலில் அதிர்ச்சி.!