கியாஸ் கசிந்து சோகம்; உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர், 2 மகள்கள் என குடும்பமே பலி.! 



Karnataka Mysore Family 4 died Gas Leak 

சமையல் கியாஸ் சிலிண்டர் உபயோகம் செய்வோர், வீட்டில் உறங்குமுன் கியாஸ் அடைக்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து பின் உறங்குவது நல்லது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், யரகனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி (45). இவரின் மனைவி மஞ்சுளா (வயது 39). தம்பதிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். 

தம்பதிகளின் அன்புக்கு அடையாளமாக அர்ச்சனா (19), சுவாதி (வயது 17) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். நேற்று இரவில் இவர்கள் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். பின் மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படவில்லை. 

இதையும் படிங்க: போதையில் வீண் தைரியம்; நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்த குடிகார இளைஞன் பலி; வீடியோ உள்ளே.!

death

கியாஸ் கசிவால் சோகம்?

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் பலனில்லை. பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து சோதனையிட்டபோது குடும்பத்தினர் நால்வரும் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், உண்மையில் கியாஸ் கசிவால் இவர்கள் உயிரிழந்தனரா? அல்லது தற்கொலை செய்ய வேண்டி அவ்வாறு செய்தனரா? என விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: தாய் உயிரிழந்தது தெரியாமல் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி; அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!