மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையில் வீண் தைரியம்; நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்த குடிகார இளைஞன் பலி; வீடியோ உள்ளே.!
இன்றளவில் இளம் தலைமுறை போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வீணாகும் குருட்டு தைரியத்தால் பல சேட்டைகளை செய்து வருகிறது. இதனால் சிலநேரம் உயிரிழப்பும் ஏற்படுகிறது. போதைப்பழக்கம், ரீல்ஸ் மோகம் போன்றவை இன்றைய தலைமுறையின் சாபக்கேடாக மாறி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சந்திராயன் குட்டா, பந்தலக்குடா பகுதியில் வசித்து வரும் நபர்கள் சிலர், கர்நாடக மாநிலத்தில் உள்ள கமலாபூர் படல்குப்பா பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அங்கு மதுபானம் அருந்தியதாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: தாய் உயிரிழந்தது தெரியாமல் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி; அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!
குடிபோதையில் வம்பு
இதில் நண்பர்கள் ஷாஜித் மற்றும் ஷஹீத் ஆற்றின் ஓரம் அமர்ந்து போதையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் போதையில் இருந்த ஷாஜித், தனது நண்பர் ஷஹீத்தை நீச்சல் அடிக்க தெரியுமா? என அலட்சியமாக ஆவேசப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.
இளைஞர் பலி
இதனால் ஆத்திரமடைந்த ஷஹீத் தனக்கு நீச்சல் தெரியாதபோதிலும் ஆற்றில் குதிக்க, சில நிமிடங்கள் நீரில் தத்தளித்தவர் அதன்பின் பேச்சு இல்லை. இதனால் பதறிப்போன நண்பர் அங்குள்ள மக்களை கூக்குரலிட்டு அழைத்து உதவி கேட்டுள்ளார்.
உடனடியாக இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து ஷஹீத்தின் உடலை மீட்டனர். மேலும், விசாரணையில் மேற்கூறிய தகவல் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
మద్యం మత్తులో స్నేహితులతో ఛాలెంజ్ చేసి నదిలో దూకిన యువకుడు.. మునిగిపోతున్న పట్టించుకోని స్నేహితులు.
— Telugu Scribe (@TeluguScribe) May 23, 2024
హైదరాబాద్ - చంద్రాయణ గుట్ట బండ్లగూడ ప్రాంతానికి చెందిన నలుగురు ఫ్రెండ్స్ కర్ణాటక రాష్ట్రంలోని కమలాపూర్ చెడుగుప్ప ప్రాంతానికి వెళ్లారు.
ఫుల్లుగా మద్యం తాగిన మైకంలో స్నేహితులు… pic.twitter.com/0wrfHfT7X1
இதையும் படிங்க: உடல் உறுப்பு செயலிழந்து கர்ப்பிணி பெண் பலி: பலாத்காரத்தால் அடுத்தடுத்து நடந்த துயரம்.!