"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
மரணத்தின் வாயில் வரை சென்று வீடு திரும்பிய தம்பதி; கிணற்றில் பாய்ந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலுவா மாவட்டத்தில் வசித்து வருபவர் கார்த்திக். இவரின் மனைவி விஸ்மயா. தம்பதிகள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனிடையே, இருவரும் விஸ்மாயாவின் வீட்டிற்கு ஆயுத பூஜை கொண்டாட சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் ஆலுவாவில் இருந்து காரில் தங்களின் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். அச்சமயம், கார் கோலஞ்சேரி பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு இயங்கியது. மேலும், சாலையோரம் இருந்த சுவரை உடைத்துக்கொண்டு, கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதையும் படிங்க: மின்தடையை விமர்சித்து நூதன போராட்டம்; மின்வாரிய அலுவலகத்தில் 'மாவுக் குளியல்' போட்டு கண்டனம்.!
கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட தம்பதி
காரில் சிக்கிக்கொண்ட தம்பதிகள் இருவரும் தங்களை காப்பாற்றக்கூறி அறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். கிணற்றுக்குள் நீர் இருக்கும் இடத்திற்கு கார் செல்லாத காரணத்தால், அதிஷ்டவசமாக இருவரும் உயிர்தப்பினர்.
தங்களை காப்பாற்றிய பொதுமக்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தம்பதிகள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளான பேருந்து; 2 பேர் பலி.. கேரளாவில் சோகம்.!