மின்தடையை விமர்சித்து நூதன போராட்டம்; மின்வாரிய அலுவலகத்தில் 'மாவுக் குளியல்' போட்டு கண்டனம்.!



in Kerala Kollam Man Protest due to Power Outage 

 

தொடர் மின்வெட்டுக்களால் ரூ.10 ஆயிரம் இழப்பை சந்தித்த மாவு மில் உரிமையாளர், நூதன போராட்டத்தை முன்னெடுத்தார்.
 
கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம், இலம்பலுர், வேலுத்தம்பி நகரில் மாவு மில் வைத்து நடத்தி வருபவர் குலங்கரக்கல் ராஜேஷ். இவர் மில் வைத்து நடத்தி வரும் பகுதியில், சமீபகாலமாக காலை 09:30 முதல் 10:30 வரை மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மாவு மில் வைத்துள்ள ராஜேஷ், காலை 6 மணிக்கு எழுந்து மாவுக்கான பொருட்களை ஊறவைத்து, அரைத்து மதியம் 1 மணிக்குள் தேவையான இடங்களில் விநியோகம் செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளான பேருந்து; 2 பேர் பலி.. கேரளாவில் சோகம்.!

ரூ.10 ஆயிரம் இழப்பு

இதனிடையே, காலை 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் வரை மின்சாரம் திடீரென துண்டிக்கப்படுவதால், அவரின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு மொத்தமாக ரூ.10000 வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

KERALA

இந்த விஷயம் ராஜேஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அவர் குந்தாரா இபி அலுவலகத்திற்கு சென்று தன் மீது மாவை ஊற்றிக் குளித்து நூதன போராட்டம் மேற்கொண்டார். இந்த போராட்டத்தை மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ளார். 

மின்வாரிய துணை பொறியாளர் பதில்

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளிடமும் ராஜேஷ் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டியதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குந்தாரா கோட்ட மின்வாரிய துணை பொறியாளர் பதில் அளித்து இருக்கிறார். 

மாவைக் கொட்டி போராட்டம் நடத்திய நபர்

இதையும் படிங்க: காதலியின் அடகுவைத்த நகையை திருப்ப ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி; இளைஞர் அதிர்ச்சி செயல்.!