மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
19 வயது மாடல் அழகி காரில் பலாத்காரம்.. போதை நண்பர்கள் 3 பேர் வெறிச்செயல்.. உடந்தையாக இருந்த தோழி.. கேரளாவில் பயங்கரம்.!
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பலாத்கார துயரத்தின் நீதியே கிடைக்காத நிலையில், 19 வயதுடைய இளம் மாடல் அழகி 3 பேர் கும்பலால் போதை மயக்கத்தில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கூலிப்படை ஆட்கள், நடிகர் திலீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் பேரதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
காசர்கோடு பகுதியில் இருக்கும் 19 வயது இளம்பெண், கொச்சி மற்றும் காக்கநாடு பகுதியில் தங்கியிருந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இவரின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை திறந்து பார்க்கையில், அவர் உடலில் காயத்துடன் மயங்கி இருந்துள்ளார். அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் மாடல் அழகியை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
பின்னர், இதுகுறித்து கொச்சி காவல் துறையினருக்கும் தகவல் தெரியவரவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாடல் அழகி 3 நண்பர்கள் & தோழியுடன் இரவில் மதுபான கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவரது நண்பர்கள் காரில் பெண்ணை ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளனர்.
வீட்டிற்கு வரும் வழியில் காரிலேயே மாடல் அழகியின் நண்பர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், இந்த விசயத்திற்கு அவரது தோழியும் உடந்தையாக இருந்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை நள்ளிரவு நேரத்தில் வீட்டில் கொண்டுவந்துவிட்டு சென்றுள்ளனர்.
இளம்பெண் பலாத்கார வலி மற்றும் போதை மயக்கத்தில் நீண்ட நேரம் உறங்கி இருக்கிறார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாடல் அழகியின் 3 நண்பர்கள் ஒரு தோழி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் நால்வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.