நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
நான் அனாதைங்க.. பெண்களின் இரக்க மனதை இரக்கமேயில்லாமல் ஏமாற்றிய கொடுமை.. 4 திருமணம் செய்தது அம்பலம்.!

தன்னை அனாதை என அறிமுகம் செய்து 4 பெண்களின் வாழ்க்கையை ஏமாற்றிய நபரை, காவல்துறையினர் பல நண்பர்களை உருவாக்கித்தரும் விதமாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து கம்பிவைத்த சிறைக்குள் அடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு, வெள்ளிரிக்குண்டு பகுதியில் வசித்து வருபவர் திபு பிலிப் (வயது 36). இவர் தனது மனதுக்கு பிடித்த பெண்களை பார்த்தால், அவர்களிடம் உடனடியாக சென்று தன்னை அனாதை என அறிமுகம் செய்து இரக்கத்தை ஏற்படுத்தி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊதாரியாக சுற்றிய மகனை கண்டித்ததால் ஆத்திரம்; நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெளுத்த மகன்.!
இவ்வாறாக பேசும் பெண்களிடம் அனாதை என்பதால் தனியே தவித்து வருவதாகவும், நீண்ட காலமாக ஒருவரும் பெண் கூட கொடுக்கவில்லை எனவும் கூறி புலம்புவதை தொடர்ந்து இருக்கிறார். இவரின் சோக திரிப்பு கதையை கேட்டு பெண்கள் வலையில் விழுந்தால், அவர்களை திருமணம் செய்து மோசடி செய்வதை தொடர்ந்து வந்துள்ளார்.
அடுத்தடுத்து 4 திருமணம்
கடந்த 10 ஆண்டுக்கு முன்னரே காசர்கோடு பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணை முதலில் திருமணம் செய்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, 2 குழந்தையை பெற்றுள்ளார். பின் பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். பின் இரண்டாவது திருமணம் செய்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
பின் அவரை ஏமாற்றிவிட்டு, எர்ணாகுளம் பகுதியில் வசித்து வரும் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இவர் பேஸ்புக்கில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவரை நான்கவதாகவும் திருமணம் செய்துகொண்டார்.
திலீப்பின் இரண்டாவது மனைவி மற்றும் ஆலப்புழா பெண் ஆகியோர் பேஸ் புக்கில் தோழிகளாக, அவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக கோன்னி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன்பேரில் திபு பிலிப் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: "என் போனை கொடு.. இல்ல? வெளிய வச்சி உன்ன போட்டுருவேன்" ஹெட்மாஸ்டரை மிரட்டிய 11th மாணவன்.!