"என் போனை கொடு.. இல்ல? வெளிய வச்சி உன்ன போட்டுருவேன்" ஹெட்மாஸ்டரை மிரட்டிய 11th மாணவன்.!



kerala palakkad 11th student threatening govt school head master

11ம் வகுப்பு மாணவன் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

செல்போனுக்கு தடை

பள்ளி வளாகங்களில் மற்றும் வகுப்பறைகளில் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தடையை மீறி மறைமுகமாக மாணவர்கள் செல்போன்களை பள்ளிக்கு கொண்டு வருவதும், அவற்றை வகுப்பறையில் வைத்து மற்றும் கழிவறையில் வைத்து பயன்படுத்தும் நிலையும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: இறந்த பின் திடீரென உயிர்த்தெழுந்த நபர்; ஆம்புலன்சில் ஆடிப்போன உறவினர்கள்.!

KERALA

வைரல் வீடியோ 

இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருக்கும் அரசு பள்ளியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவில் ஒரு 11ம் வகுப்பு மாணவர் தலைமை ஆசிரியரை மிரட்டும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

கொலை மிரட்டல்

அந்த மாணவர் தடையை மீறி செல்போனை பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார். எனவே, அது பறிமுதல் செய்யப்பட்டு தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது செல்போனை வைத்திருந்த தலைமை ஆசிரியரிடம் வந்து அந்த 11ம் வகுப்பு மாணவன், "எனது செல்போனை கொடுத்துவிடு இல்லை என்றால் நீ வெளியில் வரும்போது உன்னை கொலை செய்து விடுவேன்." என்று மிரட்டுகிறார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: அம்மாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மகன்; போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து திரும்பி வந்ததும் சோகம்.!