மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, திருட்டு திருமணம் செய்த இளைஞன் 2 முறை போக்ஸோவில் கைது.. சிறுமியின் தந்தை, இமாமும் கைதான பரிதாபம்.!
பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிக்கு வாழ்க்கை கொடுப்பதாக கூறி, போக்ஸோவில் தான் கைதாகியது போதாது என சிறுமியின் தந்தை, திருமணத்தை நடத்தி வைத்தவர் என குற்றவாளி 2 பேரை போக்ஸோவில் கைதாக வைத்த இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், நெடுமங்காடு பனவூரில் வசித்து வருபவர் அல் அமீர் (வயது 23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 11ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் போக்ஸோ வழக்கில் அமீரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், கடந்த 4 மாதத்திற்கு முன் அல் அமீன் பலாத்காரம் செய்த சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு, வழக்கில் இருந்து விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார். தன்னை வழக்கில் இருந்து விடுவித்தால் சிறுமியை திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு சிறுமியின் தந்தை மறுப்பு தெரிவிக்கவே, அல் அமீன் உறவினர்கள் மூலமாக சிறுமியின் தந்தையை வற்புறுத்தி சம்மதம் வாங்கியுள்ளார். கடந்த 18ம் தேதி மாணவியின் வீட்டில் இரவு நேரத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தை திருச்சூர் பள்ளிவாசல் இமாம் அன்சர் ஸாஸத் (வயது 39) நடத்தி வைத்துள்ளார்.
இதுகுறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே, நெடுமங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அல் அமீன், அன்சர், சிறுமியின் தந்தை ஆகியோரை கைது செய்தனர். அல் அமீன் மீது ஏற்கனவே 2 பாலியல் பலாத்காரம் மற்றும் பிற குற்ற வழக்குகள் இருக்கின்றன.