தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி 8 மாத கைக்குழந்தை பலி.. பெற்றோரே கவனம்.!



kozhikode-baby-died-bottle

 

பச்சிளம் குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர் கவனமாக இருங்கள். ஏனெனில் குழந்தைகளின் சிறிய விளையாட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், விபரீதத்தில் முடியலாம். 

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, பொக்குன்னு கிராமத்தில் வசித்து வருபவர் நிசார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: நான் அனாதைங்க.. பெண்களின் இரக்க மனதை இரக்கமேயில்லாமல் ஏமாற்றிய கொடுமை.. 4 திருமணம் செய்தது அம்பலம்.!

கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக நிஸாரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு முகமது இபாத் என பெயரிட்டு பெற்றோர் அன்புடன் வளர்த்து வந்துள்ளனர். 

KERALA

குழந்தை மரணம்

இதனிடையே, சம்பவத்தன்று குழந்தை வீட்டில் இருந்த பாட்டில் மூடியை வைத்து விளையாடி, அதனை எதிர்பாராத விதமாக விழுங்கி இருக்கிறது. இதனால் குழந்தையின் தொண்டையில் மூடி சிக்கிக்கொண்டது.

மூச்சுத்திணறி அவதிப்பட்ட குழந்தையை உடனடியாக பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே, தம்பதியின் முதல் மகனும் இதேபோல சிக்கி கடந்த ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊதாரியாக சுற்றிய மகனை கண்டித்ததால் ஆத்திரம்; நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெளுத்த மகன்.!