மும்பையில் பரபரப்பு... 12 வயது சிறுமி கற்பழிப்பு குற்றவாளி மர்ம மரணம்.!! போலீஸ் விசாரணை.!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 12 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 வயது சிறுமி கற்பழித்து கொலை
கடந்த 2024 ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த 12 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நவி மும்பையைச் சேர்ந்த விஷால்(35) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வந்தது.
சிறையில் தற்கொலை
இந்நிலையில் இன்று அதிகாலை கற்பழிப்பு குற்றவாளியான விஷால் சிறையின் கழிவறையில் சடலமாக கிடப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... பெண் பக்தரை ஆபாச படமெடுத்த விவகாரம்.!! ராமர் கோவில் ஊழியர் கைது.!!
தீவிர விசாரணை சிறைத்துறை
அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் கைதியான விஷால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சிறையில் உள்ள மற்ற கைதிகளிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கௌரவ கொலை... 20 வயது பெண்ணுக்கு கோடாரி வெட்டு.!! தந்தை, உறவினர்கள் கைது.!!