என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
அட கொடுமையே... பெண் பக்தரை ஆபாச படமெடுத்த விவகாரம்.!! ராமர் கோவில் ஊழியர் கைது.!!

அயோத்தி ராமர் கோவிலில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்த ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபரின் செல்போனில் 10 ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில்
பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டது. மேலும் கடந்த 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து கருவறையில் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்
இந்நிலையில் ராமர் கோவிலில் உள்ள தங்கும் விடுதியில் பெண் பத்தர் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்ததாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராமரை தரிசிப்பதற்காக வந்த 30 வயது பெண் பக்தர் குளிப்பதை அங்குள்ள தங்கும் விடுதியின் ஊழியரான சௌரப் தனது செல்போனில் படம் பிடித்திருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: கௌரவ கொலை... 20 வயது பெண்ணுக்கு கோடாரி வெட்டு.!! தந்தை, உறவினர்கள் கைது.!!
10 ஆபாச வீடியோக்கள்
இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியின் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை நடத்தியதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமர் கோவிலில் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... 8-ம் வகுப்பு மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! மீன் வியாபாரி கைது.!!