மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குவாரண்டைனில் இருந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆசாமிகள்! போலீசார் அதிரடி நடவடிக்கை
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சொந்த ஊரான சாகர் மாவட்டத்திற்கு சமீபத்தில் இரண்டு பெண்கள் திரும்பியுள்ளனர். உறவினர்களான அந்த பெண்களில் ஒருவர் திருமணமானவர்.
இந்தூர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இருப்பதால் அங்கிருந்து வந்த அந்த இரண்டு பெண்களும் குமோரியா பட்டோலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் தனிமையில் வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் குளிப்பதை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோவினை அதே பெண்ணிற்கு அனுப்பி தாங்கள் கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும் இல்லையென்றால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர்கள் சுனில் நாதியா மற்றும் லட்சுமி நாதியா என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வீடியோ எடுத்த செல் போனையும் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.