திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிக்கிற வெயிலுக்கு ட்ரான்ஸ்பார்மர் என்ன ஆகும்? கூலர் பொருத்தி பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகள்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அங்குள்ள பல மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதால், பலரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
கடும் வெப்பம்:
வெப்ப அலையினால் மக்கள் பல இன்னல்களை சந்திப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தங்களின் வீடுகளில் ஏசி போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மின்வாரியம் சார்பில் ட்ரான்ஸ்பார்மருக்கு பேன் வைத்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை கிடுகிடு உயர்வு; தலைநகரில் தட்டுப்பாடு.!
கூலர்கள் பொருத்தப்பட்டு ட்ரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு
அதிகரித்து வரும் கடும் வெப்பத்திலும் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படாமல் வழங்க வேண்டும் என்பதால், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் உள்ள பல ட்ரான்ஸ்பார்மர்களில், அதன் வெப்பத்தை குறைக்க ராட்சத கூலர்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
#WATCH | Madhya Pradesh: Indore Electricity Board installs coolers and fans to cool down transformers given the extreme heatwave. pic.twitter.com/VC9xZAZjL6
— ANI (@ANI) May 24, 2024
இதையும் படிங்க: சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல மறுத்த பெற்றோர்; விரக்தியில் 10 வயது சிறுமி தற்கொலை.!