திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல மறுத்த பெற்றோர்; விரக்தியில் 10 வயது சிறுமி தற்கொலை.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கோடை விடுமுறைக்கு பின்னர் அவர் ஆறாம் வகுப்பு செல்லவுள்ளார்.
சுற்றுலாவுக்கு மறுத்த பெற்றோர்
அங்குள்ள பேடேகாட் சுற்றுலா தளத்திற்கு பெற்றோரிடம் தன்னை அழைத்துசெல்லுமாறு சிறுமி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பெற்றோர் ஒவ்வொரு முறையும் எதோ ஒரு காரணம் கூறி அலைக்கழித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை; காவல்துறை விசாரணை.!
கோபத்தில் சிறுமி தற்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சிறுமி, தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் வசித்து வரும் பிற பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து செல்பி எடுத்து அனுப்பிய கணவன்; அடுத்தடுத்து நடந்த பயங்கரத்தால் கதறும் உறவினர்கள்.!