திருட சென்ற இடத்தில், சிரிப்பலையை ஏற்படுத்திய திருடன்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!



MP robberyn praying god before theft

சிசிடிவி காட்சிகள்

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அலுவலகத்தில் திருடன் ஒருவன் புகுந்து, திருடுவதற்கு முன்பு செய்த காரியம் சமூக வலைதளங்களில் பரவி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியான அந்த வீடியோவில் முகமூடி அணிந்தபடி, அலுவலக அறை கதவை திறந்து உள்ளே வருகின்றான் திருடன். உள்ளே நுழைந்தவுடன் திருடனின் கண்ணில் பட்டது பூஜை செய்யும் இடம்.

கடவுள் ஆசியுடன் திருட்டில் ஈடுபட்ட திருடன்

அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயபக்தியுடன் எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக சென்று, கடவுளை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு திருடுவதற்கு செல்கிறான் திருடன். அங்கிருந்த சில டிராக்களை பார்வையிடும் அவர் பின்னர் சிசிடிவி கேமராவை பார்க்கிறார். உடனே அந்த கேமராவை உடைக்க முயற்சித்து முயற்சி தோல்வி அடைந்ததால் மீண்டும் கீழே இறங்கி தான் வந்த வேலையில் ஈடுபடுகிறார்.

இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Madhya pradesh

திருடனை பிடிக்க முயன்று கோட்டை விட்ட ஊழியர்கள்

திருடன் ட்ராயர்களை திறந்து திருடிகொண்டு தப்பிக்க முயற்சித்த போது பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் அந்த திருடனை பிடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

நள்ளிரவில் காணாமல் போன ₹.1.5 லட்சம்

இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  போலீசார் விசாரணையில் நள்ளிரவில் நடந்த இந்த திருட்டில் பெட்ரோல் பங்கில் இருந்த ரூ.1.6 லட்சம் திருடு போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணமான 2 மாதத்தில் இரண்டாவது திருமணம்.. மனைவிக்காக கதறிய கணவன்., டேக்கா கொடுத்த இளம்பெண்.!