தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!.. சிக்குமா முக்கிய தலைகள்..?!
காஷ்மீர் மற்றும் சண்டிகாரில் என்.ஐ.ஏ பயங்கரவாத தொடர்பு குறித்து இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
காஷ்மீரில் இந்த வருடத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகவும், சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான வேற்றுமையை உண்டாக்கும் நோக்கத்துடன் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதே போல பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் உத்தரவுகளால் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களும் காஷ்மீரில் அதிகரித்துள்ளன.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு பிறகு நடந்து வரும் இந்த தாக்குதலால், தேசிய புலனாய்வு முகமையின் ஜம்மு பிரிவு கடந்த 2021-ஆம் வருடம் ஜூனில் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர், சண்டிகாரில் பயங்கரவாத செயல்களை பற்றி என்.ஐ.ஏ. இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனை சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் நடந்து வருகிறது. மேலும் இணையதளம் முகமாகவும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதால் இந்த அதிரடி நடவடிக்கை நடத்தப்படுகிறது. நேற்று காஷ்மீரின் குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோப்பூர் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் இதுபோல் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், சிம் கார்டுகள், டிஜிட்டல் உபகரணங்கள் போனறவை பறிமுதல் செய்யப்பட்டன.