திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெட்ரோலுக்கு பணமா?? யாருகிட்ட கேக்குற.. பங்க் ஊழியரிடம் காவலர் செய்த மோசமான காரியம்.!!
கேரளா மாநிலம், கன்னூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் சந்தோஷ் குமார் என்ற போலீஸ் அதிகாரி தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். பெட்ரோல் நிரப்பியபின் அங்கு பணிபுரிந்த ஊழியர் அனில் அவரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் சந்தோஷ் பணத்தை கொடுக்காமல் காரை எடுத்துக்கொண்டு புறப்பட சென்றுள்ளார்.
பெட்ரோலுக்கு பணம் கேட்ட ஊழியர்
இதனால் அனில், காரின் முன் நின்று கொண்டு பெட்ரோலுக்கு பணம் கொடுத்துவிட்டு பிறகு அங்கிருந்து கிளம்புபடி கூறியுள்ளார். ஆனால் அவர் மறுக்கவே இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அனில் காரின் முன்னால் நின்று மறித்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த போலீஸ் அதிகாரி காரின் முன் நின்று கொண்டிருந்த அனில் மீது காரை மோதியுள்ளார்.
காரில் மோதி இழுத்து செல்லப்பட்ட ஊழியர்
இதில் அனில் காரின் பேனட்டில் ஒட்டிக்கொள்ள அவர் காரை கிட்டத்தட்ட 150 மீட்டர் வரை ஓட்டிச்சென்று நிறுத்தியுள்ளார். இதில் அனிலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டு போலீஸ் அதிகாரி சந்தோஷ் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் நடக்கும் அவலம்.. வைரல் வீடியோ.!
இதையும் படிங்க: கத்தி அழுதேன்.! மூலையில் சிறுநீர் கழித்தேன்.! லிப்டிற்குள் சிக்கி தவித்த நபர்.! 2 நாட்கள் பட்ட துயரங்கள்!!