மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் நடக்கும் அவலம்.. வைரல் வீடியோ.!
குடியிருப்பில் திருட்டு
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து காலணிகள் திருடு போய்க் கொண்டே இருந்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த திருட்டில் யார் ஈடுபட்டு இருப்பார் என்பது குறித்து அவர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர்.
பிராண்டட் ஷூ
இது பல்வேறு பணக்காரர்கள் வசிக்கின்ற குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் சல்யன் என்ற நபர் தனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளார். அப்போது, அவருடைய வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த 5 பிராண்டட் ஷூக்களை ஒரு நபர் திருடுகின்ற காட்சி பதிவாகி இருந்துள்ளது.
இதையும் படிங்க: "எவன் கூட வீடியோ கால் பேசுற." மனைவியை கொன்று, பிணத்தை என்ன செய்தார் தெரியுமா.?!
சிசிடிவி வீடியோ
சத்தம் எதுவும் எழுப்பாமல் மெதுவாக வந்து அந்த பிராண்டட் ஷூக்களை பார்த்து பார்த்து ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டு அந்த திருடன் மாடிக்கு மேல் புறமாக சென்றது அதில் பதிவாகி இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சல்யன் இந்த வீடியோவை எடுத்துக் கொண்ட காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரல்
சம்பந்தப்பட்ட சிசிடிவி வீடியோவை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருடனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விலை உயர்ந்த செருப்புகள் மற்றும் விலை உயர்ந்த பிராண்டட் ஷூக்களை மட்டுமே குறி வைத்து திருடும் அந்த திருடன் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுனரின் உறக்கத்தால் உருண்டு உருக்குலைந்த கார்; ஒருவர் பலி., 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!