மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 ஆண்டுகளை நிறைவு செய்யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை; நினைவிருக்கா மக்களே?
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, 2016ல் நவம்பர் மாதம் 08ம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார். நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு, அவர் எடுத்த நடவடிக்கை சர்வதேச அளவில் மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்பட்டது.
அதுவரை நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அன்றைய தினத்தில் இரவு 8 மணியளவில் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டது.
இதையும் படிங்க: மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 7ம் வகுப்பு மாணவர்; பதறவைக்கும் சம்பவம்.. உண்மையை மறைக்கும் பள்ளி நிர்வாகம்?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பணத்தை மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்ட போதிலும், அவசர கால நிதியிழப்பை ஈடு செய்ய ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, பின் அவையும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. பிரதமர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மொத்தமாக இன்று இரவு 8 மணியுடன் 8 ஆண்டுகள் ஆகின்றன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பொதுமக்கள் பலரும் வங்கிகளில் தவம்கிடக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்.. அந்த நேரத்தில் அடைத்த மூச்சு.!! 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.!!