மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திக் திக் நிமிடங்கள்.. அந்த நேரத்தில் அடைத்த மூச்சு.!! 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.!!
மும்பை நகரின் தனியார் விடுதியில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது மாரடைப்பு ஏற்பட்டு 41 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி
குஜராத்தில் உள்ள பிரபலமான வைரத் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்த 41 வயது நபர் அதே பகுதியைச் சேர்ந்த குடும்பத்திற்கு உதவி செய்து வந்திருக்கிறார். மேலும் அவர் மும்பை வரும்போது தன்னுடன் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வரவேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறார். மேலும் சிறுமி வரவில்லை என்றால் அந்த குடும்பத்திற்கு வழங்கி வரும் உதவியை உடனடியாக நிறுத்துவதாகவும் எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 14 வயது சிறுமியை மேலாளருடன் மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மகள் எனக் கூறி ஹோட்டலில் ரூம் புக்கிங்
சிறுமியை மும்பைக்கு அழைத்து வந்த மேலாளர் தனது மகள் எனக் கூறி போலியாக தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டை மூலம் ஹோட்டலில் ரூம் புக் செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. மின்சார கம்பியிலேயே கரிக்கட்டையான லைன் மேன்.. அலட்சியத்தால் விபரீதம்.!
மாரடைப்பால் மரணம்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மேலாளரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர் வைர தொழிற்சாலையின் மேலாளர் மாரடைப்பால் மரணமடைந்ததை உறுதி செய்தனர். மேலும் இது குறித்து சிறுமியிடம் விசாரணை செய்த போது அந்த நபர் நிதி உதவி செய்வதை நிறுத்தி விடுவேன் என மிரட்டியதால் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனுப்பி வைத்ததாக கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் மும்பை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: யாருப்பா அந்த காண்ட்ராக்டரு?.. கால்வாய்க்கு நடுவே மின்கம்பம்.. இது புதுசா இருக்குன்னே.!