மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொள்ளைக்கும்பலை தனியாக எதிர்கொண்ட சிங்கப்பெண்; பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகள்.. குவியும் பாராட்டுக்கள்.!
வீட்டுக்குள் திருடர்கள் நுழைய முயன்றபோது, அவர்களை வாசலியேயே மடக்கி கொள்ளை சம்பவத்தை தடுத்த பெண்ணின் செயல் கவனத்தை பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் வசித்து வருபவர் ஜக்ஜித். இவர் பொற்கொல்லராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று வீட்டில் ஜக்ஜித், அவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.
இதையும் படிங்க: கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்; பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் பகீர் சம்பவம்.!
அச்சமயம், வீட்டுக்குள் பயங்கர ஆயுதத்துடன் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைய முயற்சித்துள்ளது. சுதாரித்துக்கொண்ட ஜக்ஜித் மனைவி, உடனடியாக வீட்டின் கதவை இழுத்து மூடினார். மேலும், மேற்படி கொள்ளையர்கள் உள்ளே வராமல் இருக்க சோபாவையும் கதவுக்கு அருகே நகர்த்தி வைத்தார்.
சிசிடிவி காட்சிகள் வைரல்
தொடர்ந்து தனது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் திரண்டு வந்ததால் கொள்ளையர்கள் மூவரும் தப்பிச் சென்றனர். இவ்விசயம் தொடர்பாக உள்ளூர் காவலருக்கு தொடர்புகொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் துரிதமான செயல் கொள்ளை சம்பவத்தை மட்டுமல்லாது, அவர்களின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது.
अमृतसर में एक महिला ने चोरों को बहादुरी से सबक सिखाया। चोरों की कोशिशों के बावजूद, महिला की दिलेरी उनके लिए भारी पड़ी...#amritsar #thief pic.twitter.com/l75wYxBM6O
— Ajeet Yadav (@ajeetkumarAT) October 1, 2024
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் உடலுறவு; பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்து துள்ளத்துடிக்க பெண் பலி.. காரணம் என்ன?..!