#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆண் நண்பருடன் உடலுறவு; பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்து துள்ளத்துடிக்க பெண் பலி.. காரணம் என்ன?..!
7 மாதங்களுக்கு முன்பு பழக்கத்தை புதுப்பித்து, 7 நாட்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த பெண்மணி, 90 நிமிடங்கள் உயிருக்கு போராடி மரணமடைந்த துயரம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நவசரி மாவட்டத்தில் 26 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவருக்கு நர்சிங் பயின்று வரும் மாணவி ஒருவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதல் வயப்பட்டு இருக்கின்றனர். அவ்வப்போது காதல் ஜோடி தனிமையில் சந்தித்துக்கொள்ளும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ப்ளஸ்1 மாணவர் & மாணவி; காரணம் என்ன?.!
இதனிடையே, கடந்த செப். 23ம் தேதி ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்து தங்கிய காதல் ஜோடி உல்லாசமாக இருந்துள்ளது. அப்போது, பெண்ணுக்கு பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி உயிருக்காக துடிதுடிக்க, விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவில்லை.
ஆன்லைனில் தீர்வு தேடிய காதலன்
பதற்றத்தில் செய்வதறியாது கிட்டத்தட்ட 2 மணிநேரம் வரை காலம் தாழ்த்திய காதலன், சமூக வலைத்தளங்களில் பெண்ணுறுப்பில் இருந்து உடலுறவின்போது இரத்தம் வந்தால் என்ன செய்வது என தேடி இருக்கிறார். பின் அவரின் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.
தகவல் அறிந்து அவர்கள் விரைந்து வந்த நிலையில், மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் செல்வதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் காதலரை கைது செய்தனர்.
உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் பெண் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்
பிரேத பரிசோதனையில், பெண்ணின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறிய சூழலிலும் கயவன் உடலுறவு மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் கடுமையான வகையிலான காயம் ஏற்பட்டு, அதனால் இரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும் எனக்கூறும் காவல்துறையினர், குற்றவாளியான பெண்ணின் காதலனை சிறையில் அடைத்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சமூக வலைத்தளம் வாயிலாக அறிமுகமானவர்கள், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் தங்களின் நட்பை புதுப்பித்து இருக்கின்றனர்.
இதனிடையே, வயது கோளாறில் ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கச் சென்ற பெண் இறுதியில் சடலமாக வீடு திரும்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; கல்லூரி பேராசிரியர் மாரடைப்பால் மரணம்.!