மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜஸ்தானில் கொடூரம்... கன்று குட்டிக்கு பாலியல் வன்புணர்வு.!! இளைஞரை கைது செய்த காவல்துறை.!!
ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கன்று குட்டியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கன்றுக்குட்டியின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உடல்நிலை குன்றிய கன்றுக்குட்டி
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள அல்வார் கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் தனது வீட்டில் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது கன்று குட்டி ஒன்று உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்டிருக்கிறது.
சிசிடிவியில் சிக்கிய நபர்
இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர் தனது வீட்டின் மாட்டு கொட்டகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை அவர் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துப் பார்த்தபோது நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தனது கன்று குட்டியுடன் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: #Breaking: மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளி; அவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு.!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கன்றுக்குட்டியை பாலியல் வன்புணர்வு செய்த பிரியன்சு என்ற நபரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கன்று குட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: டெல்லியை ஒரேஇரவில் புரட்டிப்போட்ட கனமழை; தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதி.!