#Breaking: மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளி; அவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு.!



Lok Sabha Adjourned till 12 PM on 28 June 2024 

 

18 வது மக்களவை அரசு பொறுப்பேற்றதைத்தொடர்ந்து, மக்களவை தனது முதல் கூட்டத்தொடரை சந்தித்து இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்களை எழுப்ப ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. 

அதேபோல, அவைதொடர் நிகழ்ச்சிகள் தொடங்கிய நாளில் இருந்து, பதவியேற்பின்போதே இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் மாதிரியை தங்களின் கைகளில் வைத்தவாறு பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: #Breaking: எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி; த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து.!

மக்களவை & மாநிலங்களவை ஒத்திவைப்பு

இந்நிலையில், மக்களவையில் நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் மக்களவை கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்ட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சபாநாயகர் ஓம் பிரில்லா வெளியிட்டார்.

அதேபோல, மாநிலங்களவையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்து அமளியில் ஈடுபட்டு வருவதால், மாநிலங்களவையும் 12 மணிவரை ஒத்திவைக்கப்ட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிகோரும் நிலையில், ஆளும்கட்சி அது தேவையற்றது என கூறுவதால் அமளி தொடருகிறது.

 

இதையும் படிங்க: டெல்லியை ஒரேஇரவில் புரட்டிப்போட்ட கனமழை; தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதி.!