ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
நெஞ்சமெல்லாம் பதறுதே.. கை-கால்களை உடைத்து., 4 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; ரணகொடூரம்..!
சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர், சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்து கொன்ற பதறவைக்கும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
சிறுமி மாயம்
ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தில் உள்ள மோரோரா கிராமத்தில், 4 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை நவம்பர் 30 அன்று, மாலை நேரத்தில் வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென மாயமாகினார்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி பலாத்காரம், வீடியோ எடுத்து மிரட்டல்; 2 கயவர்கள் அதிர்ச்சி செயல்..!
பலாத்காரம், கை-கால் உடைக்கப்பட்டு கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சிறுமியை தேடும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இரவு சுமார் 11 மணியளவில் கை-கால்கள் உடைக்கப்பட்டு, கொடூரமாக சிறுமி கொலை செய்யப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டது.
ப்ரேத பரிசோதனையில் உறுதி
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட அடையாளம் இருந்தால், அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க வேண்டும் என விசாரணை நடந்து வந்தது.
குற்றவாளி கைது
பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கை-கால்கள் உடைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது உறுதியானது. விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபரே, சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்றது அம்பலமானது.
இதையும் படிங்க: "என்னை பார்த்து சிரிச்சா, கொன்னு கற்பழிச்சிட்டேன்" - சைக்கோ சீரியல் கில்லர் திடுக் வாக்குமூலம்.!