மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டிற்கு வெளியே ஊர்ந்துகொண்டிருந்த வெள்ளைநிற பாம்பு.. அதிர்ச்சியில் மக்கள்..
வீட்டிற்கு வெளியே ஊர்ந்து கொண்டிருந்த அரிய வகை அல்பினோ பாம்பை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அல்பினிசம் எனப்படும் வெளிறல் நோயால் பாதிக்கப்பட்டு வெண்மை நிறமாக இருக்கும் பாம்புதான் அல்பினோ பாம்பாகும். இந்த பாம்பின் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் காணப்படும். இந்தவகை பாம்புகள் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அல்பினோ வகை பாம்பானது ஒடிஷாவில் உள்ள ஜாஜ்பூரில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வெளியே ஊர்ந்துகொண்டிருந்துள்ளது. இந்த அரியவகை பாம்பை பார்த்து அச்சமடைந்த அந்த பகுதி மக்கள் உடனே இதுகுறித்து பாம்பு மீட்பு குழுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு குழுவினர், பாம்பை பத்திரமாக மீட்டு எடுத்துச்சென்றனர்.