திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடல் உறுப்பு செயலிழந்து கர்ப்பிணி பெண் பலி: பலாத்காரத்தால் அடுத்தடுத்து நடந்த துயரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் குஷிநகர் மாவட்டம், பத்ருணா பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணுக்கு, இளைஞர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் இளம்பெண்ணை ஆசைவலையில் விழ வைத்து, பலமுறை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து இருக்கிறார்.
பலாத்காரத்தால் கர்ப்பம்
இதனால் பெண்மணி கர்ப்பமான நிலையில், பெண்மணி இளைஞர் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: "தலைகீழாகத்தான் குதிப்பேன்" - ரீல்ஸ் மோகத்தால் 100 அடி ஆழ குவாரி குட்டையில் விழுந்த சிறுவன் பலி.! மூச்சுத்திணறி பரிதாபம்.!!
கரு சிதைவு & கர்ப்பிணி பலி
விசாரணையை தொடர்ந்து இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண்மணிக்கு திடீரென நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவரின் கரு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
கரு உயிரிழந்து தொடர் சிகிச்சையில் இருந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் அடுத்தடுத்து செயலிழந்து பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அழுது கொண்டே இருந்த 3 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்; குடும்பச்சண்டையில் ஆத்திரம்.!