திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விவாகரத்துக்கு பின் பள்ளி நண்பருடன் திடீர் காதல்; கருத்து வேறுபாடால் கத்தியால் பதில்சொன்ன பயங்கரம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சாத்ரினகா பகுதியில் வசித்து வருபவர் ஷ்ரவ்யா (வயது 32). இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஷ்ரவயாவுக்கும் - அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.
விவாகரத்து செய்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்த நிலையில், ஷ்ரவ்யா தனது பள்ளிப்பருவ நண்பர் மணிகண்டா என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் இவர்களுக்கு இடையே நாளடைவில் உறவு-ரீதியிலான பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர்.
புதிய காதலால் நேர்ந்த பயங்கரம்
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். சில சண்டைகளுக்கு பின்னர் ஷ்ரவ்யா தனது வீட்டில் இருந்த நிலையில், அங்கு சென்ற மணிகண்டா காதலியின் மீது ஏறி அமர்ந்து, அவரை கடுமையாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். படுகாயத்துடன் பெண்மணி அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: முன்னாள் காதலியை பழிவாங்க, மணமேடையில் இளைஞர் செய்த செயல்; என்ன நடந்தது தெரியுமா?.!
மேலும், அவரை கத்தியால் குத்திய இளைஞரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மணிகண்டனை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் விவசாயி கண்மூடித்தனமாக அடித்துக்கொலை; நெஞ்சை ரணமாக்கும் காணொளி..!